சாதனை ஸ்டார்: கிறிஸ்கெய்ல் அடித்த ஆயிரம் சிக்ஸர்கள்

 
chris gayle

மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் 1000 சிக்சர்களை அடித்து சாதனை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெய்ல் அதிரடி ஆட்டக்காரர் என்பதும் அவரது அதிரடி ஆட்டத்தால் பல போட்டிகளை அந்த அணி வென்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெய்ல் மிக அபாரமாக விளையாடி 67 ரன்களை அடித்தார். இந்த போட்டியில் அவர் ஆயிரம் சிக்சர்களை அடித்து முடித்த சாதனையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

உலகில் டி20 போட்டிகளில் ஆயிரம் சிக்சர்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை கிறிஸ்கெயில் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி சர்வதேச டி20 போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார் என்பதும் இன்னொரு சாதனை என்பது குறிப்பிடத்தக்கது

சாதனை ஸ்டார் கிறிஸ்கெயிலுக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web