17.3 ஓவரில் வெற்றி பெற்றும் 6வது இடமே: ராஜஸ்தான் பரிதாபம்

 

இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 50வது போட்டியில் ராயல் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது

பஞ்சாப் அணி கொடுத்த 186 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 186 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியின் வெற்றியின் மூலம் அந்த அணி 12 புள்ளிகள் கிடைத்த போதிலும் அந்த அணியின் ரன் ரேட் குறைவு காரணமாக ஆறாவது இடத்தில் தான் மீண்டும் உள்ளது என்பது பரிதாபத்திற்கு உரியதாகவும்,

ஆனால் அதே நேரத்தில் பஞ்சாப் அணி தோல்வியடைந்தாலும் நான்காவது இடத்தை தக்கவைத்துள்ளது இந்த நிலையில் அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுகள் தான் நான்காவது இடத்தைப் பிடிப்பது யார் என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த தொடரில் 50 போட்டிகள் முடிவடைந்த பின்னரும் மும்பை தவிர இன்னும் எந்த அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் ஆகும். இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் 99 ரன்கள் அடித்தார் என்றால் ராஜஸ்தான் அணியின் பென்ஸ்டோக்க் அதிரடியாக 50 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web