ஐபிஎல் பெட்டிங்கில் ஈடுபட்ட 65 பேர் கொண்ட கும்பல் கைது: சுமார் ரூ.1 கோடி பறிமுதல்!

 

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியின் முடிவுகளை மாற்றும் வகையில் சூதாட்டமும், போட்டியின் முடிவுகளை கணிக்கும் பெட்டிங்கும் நடந்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது

சூதாட்டக்காரர்கள் கிரிக்கெட் வீரர் ஒருவரை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டதாக ஐபிஎல் நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெங்களூரில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 65 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த சோதனையில் அவர்களிடம் 96 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்டிங்கில் கிட்டத்தட்ட ரூபாய் ஒரு கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பெங்களூரில் உள்ள மகாதேவபுரம் என்ற பகுதியில் பெட்டிங் நடப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் இன்று அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதேபோல் பெங்களூரில் மேலும் சில இடங்களில் சூதாட்டம் நடைபெற்று வருவதாகவும் அது குறித்தும் போலீசார் விசாரணை வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன ஐபிஎல் சூதாட்டத்தில் கோடிக்கணக்கில் பணம் வழங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web