21 பந்துகளில் 60 ரன்கள்: ஹர்திக் பாண்ட்யா விஸ்வரூபம்!

 

இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 45 ஆவது போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின 

இந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் திணறிய போதிலும் சூர்யகுமார் யாதவ் மற்றும் திவாரி ஓரளவுக்கு நிலைத்து நின்று ஆடினர்

ஒரு கட்டத்தில் 16 ஓவரில் மும்பை அணி 121 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அதிகபட்சம் 160 ரன்கள் மட்டுமே மும்பை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது களத்தில் இறங்கிய ஹர்திக் பாண்டியா 21 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து விஸ்வரூபம் எடுத்தார். அவர் அடித்த 60 ரன்களில் 6 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 196 என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், பட்லர், ஸ்மித் ஆகிய ஐந்து பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இருந்தாலும் இந்த இலக்கை எட்ட முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web