6 வெற்றி கண்ணா!! சொல்லும்போதே அதிருதில்ல!!!! – இந்திய ரசிகர்கள்

லண்டன்: இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாளை ஜூன் 16 ஆம் தேதி களமிறங்கவுள்ளன. இந்த எதிர்பார்ப்பு இன்று நேற்றல்ல, உலகக்கோப்பை தொடங்கியதிலிருந்தே இருந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் வெற்றி: முதல் ஆட்டத்தின் சிட்னி மைதானத்தில், முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. அதிரடியாக பாகிஸ்தானை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. அடுத்தடுத்த அதிரடிகள்: 1996ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் பெங்களூரில் பாகிஸ்தானை 39 ரன்கள்
 
6 வெற்றி கண்ணா!! சொல்லும்போதே அதிருதில்ல!!!! – இந்திய ரசிகர்கள்

லண்டன்:

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாளை ஜூன் 16 ஆம் தேதி களமிறங்கவுள்ளன. இந்த எதிர்பார்ப்பு இன்று நேற்றல்ல, உலகக்கோப்பை தொடங்கியதிலிருந்தே இருந்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் வெற்றி:

முதல் ஆட்டத்தின் சிட்னி மைதானத்தில், முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. அதிரடியாக பாகிஸ்தானை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

 அடுத்தடுத்த அதிரடிகள்:

1996ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் பெங்களூரில் பாகிஸ்தானை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. முதலில் பேட் செய்த இந்தியா, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்களை குவித்தது.. பாகிஸ்தான் 248 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோற்றது.

6 வெற்றி கண்ணா!! சொல்லும்போதே அதிருதில்ல!!!! – இந்திய ரசிகர்கள்

மான்செஸ்டரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா:

உலக கோப்பை 1999ல் இந்தியா-பாகிஸ்தான் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. வெறும் 180 ரன்களுக்கு ஆல்அவுட்டானது பாகிஸ்தான்.

பரிதவிக்கும் பாகிஸ்தான்:

2003ம் ஆண்டு உலக கோப்பை தொடரில், செஞ்சூரியனில் இந்தியா-  பாகிஸ்தான் மோதியது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்தது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றது இந்தியா.

 2011ம் ஆண்டு மொகாலியில் நடைபெற்ற போட்டியில், இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்தது. இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

கடந்த உலக கோப்பை தொடர் 2015ல் நடந்தபோது, இந்தியா-  பாகிஸ்தான் மோதியது. இறுதியில், 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானி வீழ்த்தியது.

மீளா சோகத்தில் பாகிஸ்தான்:

எதிர்கொண்ட 6 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றியாவது பெற்றுவிட வேண்டும் என்று மிகுந்த நெருக்கடியில் உள்ளது.

From around the web