தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் நிதான ஆட்டம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே தொடரை வெல்லும் அணி எது என்பதை முடிவு செய்யும் 5வது ஒருநாள் போட்டி தற்போது கேப்டவுன் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானம் செய்ததால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து
 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் நிதான ஆட்டம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே தொடரை வெல்லும் அணி எது என்பதை முடிவு செய்யும் 5வது ஒருநாள் போட்டி தற்போது கேப்டவுன் நகரில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானம் செய்ததால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்க்க ஆட்டக்காரர் ஃபகர் ஜமான் 70 ரன்களும், இமாத் வாசிம் 47 ரன்களும் எடுத்தனர்.

தென்னாபிரிக்கா தரப்பில் பிரிட்டோரிய்ஸ், பெஹலூக்வாயோ தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இன்னும் சில நிமிடங்களில் என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்யவுள்ளது.

From around the web