6 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் காலி: திணறும் பஞ்சாப்

 
6 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் காலி: திணறும் பஞ்சாப்

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணி மோதி வரும் நிலையில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்த 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து விட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சஹர் மிக அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து பஞ்சாப் அணி சற்று முன் களம் இறங்கியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

pun vs csk

அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் கே.எல் ராகுல், மயங்க் அகர்வால், தீபக் ஹூடா, கிறிஸ் கெய்ல்மற்றும் நிக்கலஸ் பூரன் ஆகிய ஐந்து பேர்களும் சொற்ப ரன்னில் அவுட்டாகியதையடுத்து சற்றுமுன் வரை பஞ்சாப் அணி 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது


 

From around the web