ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள்: திட்டு வாங்கிய திவேட்டியாவின் விஸ்வரூபம்


 

 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியின் ராகுல் திவேட்டியா ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக விளையாடி ரசிகர்களிடம் திட்டு வாங்கிய நிலையில் 18-வது ஓவரில் திடீரென விஸ்வரூபம் எடுத்து ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அசத்தினார் 

நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 17 ஓவர்கள் முடிவில் 173 ரன்கள் எடுத்திருந்தது. 3 ஓவர்களில் 51 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்த  அதுவரை மிகவும் மெதுவாக விளையாடி ரசிகர்களிடம் சரமாரியாக திட்டு வாங்கிய ராகுல் திவேட்டியா திடீரென விஸ்வரூபம் எடுத்தார்

கார்ட்டர் வீசிய 18-வது ஓவரை விளாசிய ராகுல் அந்த ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்ததால் 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதற்கு அடுத்த ஓவரை வீச வந்த முகமது ஷமியையும் விட்டுவைக்காமல் அதிலும் 3 சிக்சர்கள் அடிக்கப்பட்டதால் ராஜஸ்தான் அணி மிக எளிதில் 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியின் ஆரம்பம் முதல் திட்டு வாங்கிக் கொண்டு இருந்த ராகுல் திவேட்டியா திடீரென விஸ்வரூபம் எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது

From around the web