தொடர்ச்சியான 4வது தோல்வி: என்ன ஆச்சு கொல்கத்தா அணிக்கு?

 
தொடர்ச்சியான 4வது தோல்வி: என்ன ஆச்சு கொல்கத்தா அணிக்கு?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. நேற்றைய தோல்வி கொல்கத்தாவுக்கு நான்காவது தொடர் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது 

ஏற்கனவே கொல்கத்தா அணி மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோல்வியடைந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததால் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

kkr vs rr

கொல்கத்தா அணி ஐதராபாத் அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது 2 புள்ளிகளுடன் அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது/ ராஜஸ்தான் அணிக்கு நேற்றைய போட்டி இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது

From around the web