இங்கிலாந்துக்கு 482 ரன்கள் இலக்கு: அஸ்வின் அபார சதம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 13ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
டாஸ் வென்று முதல் இன்னிங்சில் 329 ரன்கள் இந்திய அணி அடித்திருந்த நிலையில் இங்கிலாந்து அணி 134 ரன்களில் சுருண்டது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் அஸ்வின் ஆகியோர் இணைந்து அபாரமாக விளையாடினார். அஸ்வின் இந்த இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்தார் என்பதும் கேப்டன் விராத் கோலி 62 ரன்கள் அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
அஸ்வின் 14 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 106 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். அதுமட்டுமின்றி அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மண்ணில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
இந்த நிலையில் இங்கிலாந்து அணி 482 என்ற இலக்கை நோக்கி தற்போது விளையாடி வருகிறது என்பதும் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது