நேற்று 33 ரன்களில் 4 விக்கெட், இன்று 308 ரன்கள்: பாகிஸ்தான் அபாரம்!

 

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது என்பதும் நேற்று கராச்சியில் ஆரம்பித்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இதனை அடுத்து நேற்று முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது முதலே மிக அபாரமாக விளையாடிய பவத் அலாம் 109 ரன்கள் எடுத்தார். அதேபோல் அஷ்ரப் அதிரடியாக விளையாடி 64 ரன்கள் அடித்தார் 

fawad

இதனை அடுத்து இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்க அணியை விட முதல் இன்னிங்ஸில் 88 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

33 ரன்களுக்கு 4 விக்கெட் என்று தத்தளித்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியை தனி ஒரு ஆளாக மீட்ட பவத் அலாமுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

From around the web