3வது டி20 போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த சில நாட்களாக இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடர் போட்டிகளில் விளையாடி வருவது தெரிந்ததே

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த சில நாட்களாக இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடர் போட்டிகளில் விளையாடி வருவது தெரிந்ததே

ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 146 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 

இதனையடுத்து இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக மிட்செல் மைக்கலும், தொடர் நாயகனாக பட்லரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் இரு நாட்டு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 

From around the web