12 பந்துகளில் 35 ரன்கள்: டிவில்லியர்ஸ் எடுத்த அதிரடி அவதாரம்

 

இன்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 12 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி தங்கள் அணிக்கு இரண்டு பந்துகள் மீதம் இருக்கும் போதே வெற்றியைத் தேடிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 178 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி ஒரு கட்டத்தில் 12 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் ராஜஸ்தான் அணி நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் கருதினர் 

ஆனால் டிவில்லியர்ஸ் அதிரடி அவதாரம் எடுத்தார். முதல் மூன்று பந்தில் சிக்ஸர்கள் அடித்ததால் அந்த ஓவரில் மொத்தம் 25 ரன்கள் கிடைத்தது. எனவே கடைசி ஓவரில் வெறும் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 19.5வது ஓவர்களிலேயே 179 ரன்கள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது

இதனை அடுத்து அந்த அணி தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மும்பை, டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய மூன்று அணிகள் 12 புள்ளிகளுடன் முதல் மூன்று இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இன்று தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி 7-வது இடத்தில் உள்ளது

From around the web