340 ரன்கள் குவித்த இந்தியா! தவான், கே.எல்.ராகுல் அபாரம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்துள்ளது இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கியது தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 42 ரன்களும், தவான் 96 ரன்களும், கேப்டன் விராட் கோலி 78 ரன்கள் எடுத்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 7
 
340 ரன்கள் குவித்த இந்தியா! தவான், கே.எல்.ராகுல் அபாரம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்துள்ளது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கியது

தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 42 ரன்களும், தவான் 96 ரன்களும், கேப்டன் விராட் கோலி 78 ரன்கள் எடுத்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 7 ரன்களில் அவுட் ஆனபோதிலும் அடுத்து களமிறங்கிய கேஎல் ராகுல் அதிரடியாக 52 பந்துகளில் 80 ரன்கள் அடித்து அசத்தினார். ஜடேஜா 20 ரன்கள் எடுக்க மொத்தத்தில் 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்துள்ளது

341 என்ற இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் ஆஸ்திரேலிய அணியில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆஸ்திரேலியாவின் ஜாம்பா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளையும் ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web