330 இலக்கை நோக்கி விளையாடும் இங்கிலாந்து: அபாரமாக விக்கெட்டுக்கள் எடுத்த புவனேஷ்குமார்

 

இன்று புனே மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 330 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் நிலையில் 2 விக்கெட்டுகளை புவனேஷ் குமார் அபாரமாக வீழ்த்தியுள்ளார் 

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் இந்தியாவை பேட் செய்ய சொன்னது. இதனை அடுத்து களத்தில் இறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்தது. ரிஷப் பண்ட் 78 ரன்கள், ஹர்திக் பாண்டியா 64 ரன்கள், ஷிகர் தவன் 67 ரன்கள் எடுத்தனர் 

cricket

இந்த நிலையில் 330 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே ஜேசன் ராய் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து மூன்றாவது ஓவரில் பெயர்ஸ்டோ விக்கெட்டையும் இழந்தது. இதனை அடுத்து தற்போது அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web