நேற்றைய போட்டியில் 33 சிக்ஸர்கள்: யார் யார் எத்தனை சிக்ஸர்கள்?

 

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக ராஜஸ்தான் அணிக்கு 2 ஓவர்களில் 58 ரன்கள் கொடுத்தது முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

பியூஷ் சாவ்லா வீசிய எட்டாவது ஓவரில் 28 ரன்கள் மற்றும் நிகிடி வீசிய 20வது ஓவரில் 30 ரன்களும் அடிக்கப்பட்டதே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் 

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியினர் இணைந்து மொத்தம் 33 சிக்சர்களை அடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டியில் அதிகபட்ச சிக்ஸர்களான 33 சிக்ஸர்கள் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு அடிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 33 சிக்ஸர்கள் அடித்த நிலையில் அதே அளவிலான சிக்ஸர்கள் நேற்றும் அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் 9 சிக்ஸர்கள், ஸ்மித் 4 சிக்ஸர்கள், ஆர்ச்சர் 4 சிக்ஸர்கள், டூபிளஸ்சிஸ் 7 சிக்ஸர்கள், வாட்சன் 4 சிக்ஸர்கள், சாம் கர்ரன் 2 சிக்ஸர்கள், மற்றும் தோனி 3 சிக்ஸர்கள் என மொத்தம் 33 அடித்துள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது 

From around the web