3 வெற்றி, 5 தோல்வி, சாம்பியன் பட்டம்: 2010ஆம் ஆண்டு திரும்புகிறதா சிஎஸ்கே அணிக்கு?

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஐதாராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம் 

நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் வித்தியாசமான அணுகுமுறையே இந்த வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றில் வெற்றியும் ஐந்தில் தோல்வியும் அடைந்துள்ளது. இன்னும் அந்த அணிக்கு 6 போட்டிகள் உள்ள நிலையில் அதில் குறைந்தது 4 போட்டிகளில் வென்றால்தான் பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு 8 போட்டிகளில் விளையாடி முடித்திருந்த சிஎஸ்கே அணி மூன்றில் வெற்றியும் ஐந்தில் தோல்வியும் பெற்றிருந்தது  ன்பதும் அதன் பின்னர் பிளே ஆப் போட்டியில் நுழைந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 

அதே போல்தான் 10 வருடம் கழித்து இந்த ஆண்டும் 8 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும் ஐந்தில் தோல்வியும் சிஎஸ்கே அனி பெற்று உள்ளதால் இந்த ஆண்டும் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web