கோஹ்லி அபார சதம்: 299 இலக்கை எளிதில் எட்டிய இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்களில் தோல்வி அடைந்த நிலையில் நேற்று அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி மார்ஷின் அபார சதத்தால் 50 ஓவர்களில் 298 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 299 ரன்கள்
 


கோஹ்லி அபார சதம்: 299 இலக்கை எளிதில் எட்டிய இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்களில் தோல்வி அடைந்த நிலையில் நேற்று அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி மார்ஷின் அபார சதத்தால் 50 ஓவர்களில் 298 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 299 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

299 என்ற பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் பேட்டிங் நேற்று அபாரமாக இருந்தது. ரோஹித் சர்மா 43, தவான் 32, விராத் கோஹ்லியின் சதம், மற்றும் தல தோனியின் அதிரடியான 65 ரன்கள் ஆகியவை இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது. இந்திய அணி தனது இலக்கை 49.2 ஓவர்களில் அடைந்து வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி வரும் 18ஆம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.


From around the web