24 கிராண்ட்ஸ்லாம் சாதனை கனவு தகர்ந்தது: அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி!

தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் பட்டம் வென்றால் 24 கிராண்ட்ஸ்லாம் வென்ற புதிய சாதனை ஏற்படுத்துவார் என்ற நிலை இருந்தது.
 

தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் பட்டம் வென்றால் 24 கிராண்ட்ஸ்லாம் வென்ற புதிய சாதனை ஏற்படுத்துவார் என்ற நிலை இருந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் அரையிறுதியில் செரீனா தோல்வி அடைந்தார்.

இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் நட்சத்திர வீராங்கனை விக்டோரியா அசரென்காவுடன் மோதினார். இந்த போட்டியில் வெகு எளிதாக 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை செரீனா வென்றார். அதனால் இன்னும் ஒரு செட்டை வென்றால் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்டோரியா அசரென்கா, அடுத்த இரண்டு செட்களை 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தினார். இதனால் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்

இந்த தோல்வியால் செரீனா வில்லியம்ஸின் 24வது கிராண்ட்ஸ்லாம் கனவு தகர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web