புரோ கபடி 2018: பெங்களூரு அணி சாம்பியன்

புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று இறுதிப்போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல மோதின ஆட்டத்தின் முதல் பாதியில் குஜராத் அணி வீரர்கள் அபாரமாக ஆடியதால் முதல் பாதியின் முடிவில் 16 – 9 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது பாதியில் சுதாரித்த பெங்களூர் அணி தொடர்ந்து புள்ளிகளை குவித்தனர். அதிர்ஷ்டமும் கைகொடுத்ததால் இறுதியில்
 


புரோ கபடி 2018: பெங்களூரு அணி சாம்பியன்

புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று இறுதிப்போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல மோதின

ஆட்டத்தின் முதல் பாதியில் குஜராத் அணி வீரர்கள் அபாரமாக ஆடியதால் முதல் பாதியின் முடிவில் 16 – 9 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது பாதியில் சுதாரித்த பெங்களூர் அணி தொடர்ந்து புள்ளிகளை குவித்தனர். அதிர்ஷ்டமும் கைகொடுத்ததால் இறுதியில் பெங்களூரு புல்ஸ் அணி 38 – 33 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் பார்சுன் ஜயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புரோ கபடி லீக் கோப்பையை கைப்பற்றியது

பெங்களூர் அணியின் பவன் ஷெராவத் அதிரடியாக விளையாடி 25 ரெய்டுகளில் 22 புள்ளிகள் எடுத்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடி ரொக்கபரிசும், தோல்வி அடைந்த குஜராத் அணிக்கு ரூ.1.8 கோடி ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

From around the web