2 தமிழக வீரர்களுக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு! விராட் கோலி தலைமை!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!
 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதலில் நான்கு டெஸ்ட் போட்டிகள் நடந்தது. அதில் இந்திய அணி அங்கு 3 க்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வெற்றி கொண்டது. அது தொடர்ந்து தற்போது 20-20 போட்டிகள்  நடைபெற்று வருவது 2 போட்டிகளில் இந்திய அணியும் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் ஒரு போட்டி மீது உள்ளதால் இப்போது  வெற்றி கடும் போட்டியாக உள்ளது.

bumrah

தற்போது இந்தியஅணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணி வீரர்களை  அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதில் இந்திய அணியில் கேப்டனாக விராட் கோலி உள்ளார் எனவும் அவரது தலைமையிலான அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கே எல் ராகுல், வாய்ப்பு கிடைத்தது. மேலும் தமிழக அணி வீரரான நடராஜனும்,வாஷிங்டன் சுந்தர்  இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் புவனேஸ்வர் குமார்,   தாகூர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியாவின் நம்பர் ஒன் பாவலரான பும்ரா பெயர் சேர்க்கப்படவில்லை. 

From around the web