பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு: கிறிஸ் கெய்ல் வெற்றிக்கு உதவுவாரா?

 

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 31வது போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றனர். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற விராத் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்ததை அடுத்து அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து  171 ரன்கள் எடுத்தது. விராத் கோஹ்லி 48 ரன்களும் டூபே 23 ரன்களும், பின்ச் 20 ரன்களும் எடுத்தனர்.

பஞ்சாப் தரப்பில் முகமது ஷமி அபாரமாக பந்துவீசி விராத் கோஹ்லி உள்பட 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அஸ்வின் 2 விக்கெட்டுக்களையும், அர்ஷ்தீப்சிங் மற்றும் ஜோர்டான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்

இந்த நிலையில் 172 என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்யவுள்ளது. பஞ்சாப் அணியில் இன்று கிறிஸ் கெய்ல் இணைந்துள்ளதால் அந்த அணிக்கு கூடுதல் பலம் என்பதும் ஏற்கனவே மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், பூரன், மேக்ஸ்வெல் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணியில் விளையாடும் 11 பேர் இவர்கள் தான்:

பஞ்சாப்: மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், பூரன், மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டன், அஸ்வின், ரவி பிஷ்னாய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்,

பெங்களூர்: பின்ச், படிக்கல், விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ், ஷிவம் டூபே, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், உடானா, முகமது சிராஜ், நவ்தீப்சிங் மற்றும் சாஹல்,

From around the web