154 டாட்பால்கள், இருப்பினும் 281 ரன்கள் எடுத்த பாகிஸ்தான்!

 

பாகிஸ்தான் நாட்டில் ஜிம்பாப்வே அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட சென்றுள்ளது. இன்று ராவல்பிண்டியில் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 281 ரன்கள் எடுத்துள்ளது

இமாம் உல் ஹக் 58 ரன்களும், ஹரிஸ் சோஹைல் 71 ரன்களும், இமாத் வாசிம் 34 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாவே தரப்பில் முசாராபானி, சிசோரோ தலா இரண்டு விக்கெட்டுக்களையும், மும்பா, சிக்கந்தர் ரஸ்சா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்றைய போட்டியில் ஜிம்பாவே 154 டாட்பால்கள் போட்டிருந்தும் பாகிஸ்தான் 281 ரன்கள் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 282 என்ற இலக்கை நோக்கி தற்போது விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரரான சாரி முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். தற்போது கேப்டன் சிபாபா மற்றும் எர்வின் ஆகியோர் விளையாடி வருகின்றனர். சற்றுமுன் வரை ஜிம்பாவே அணி 3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 2 ரன்கள் எடுத்துள்ளது

From around the web