முதல் ஓவரில் 15 ரன்கள், 2வது ஓவரில் விக்கெட்: மும்பை அணியின் தொடக்கம்!


 

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதல் பிளே ஆப் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து மும்பை அணி சற்று முன் தனது பேட்டிங்கை தொடங்கியுள்ளது 

மும்பை அணி நேற்று முன் தினம் ஹைதராபாத்துக்கு எதிரான கடந்த போட்டியில் படுதோல்வி அடைந்த நிலையில் இன்று அதிரடியாக விளையாடி வருகிறது. சாம்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே 15 ரன்களை மும்பை அணி எடுத்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது ஓவரில் அஸ்வின் பந்துவீச்சுக்கு எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். 

இதனிடையே நின்று விளையாடும் இரு அணிகளில் உள்ள வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு:

டெல்லி அணி: பிபி ஷா, தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஸ்டோனிஸ், அக்சர் பட்டேல், சாம்ஸ், அஸ்வின், ரபடா, நார்ட்ஜி

மும்பை அணி: ரோஹித் சர்மா, டீகாக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, நைல், டிரண்ட் போல்ட், சஹார், பும்ரா,

From around the web