கெட்டுப்போன பிரியாணி: எச்சரித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்!!

விழுப்புரம் நீதிமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள பல்லாவரம் யா. முஹைய்யதீன் பிரியாணி கடையில் கெட்டுப்போன பிரியாணியை  வாடிகையாளர்களுக்கு தருவதாக  புகார் வந்தது.

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவின் பெயரிலும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சுகந்தனின் பரிந்துரை பெயரில் இன்று ஆய்வு நடத்தினர்.

இதில் சில குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது . இது குறித்து ஆய்வு அறிக்கையை பிரியாணி கடை நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து அசைவ உணவகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 5 கிலோ சாயம் ஏற்றப்பட்ட கோழிக்கறிகளை பறிமுதல் செய்து அதனை அழித்துள்ளனர்.

இது போன்ற செயல்களில் அசைவ உணவகங்கள் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment