உத்திரகோசமங்கையில் தினமும் 12 மணிக்கு நடக்கும் உச்சிக்கால ஸ்படிக லிங்கபூஜை

உத்திரகோசமங்கையில் தினமும் 12 மணிக்கு நடக்கும் உச்சிக்கால ஸ்படிக லிங்கபூஜை
 
உத்திரகோசமங்கையில் தினமும் 12 மணிக்கு நடக்கும் உச்சிக்கால ஸ்படிக லிங்கபூஜை

இராமநாதபுரம் மாவட்டத்தில் திரு உத்திரகோசமங்கை கோவில். இறைவனும் இறைவியும் அதாவது சிவபெருமானும் பார்வதியும் இவ்வூரில்தான் பிறந்தார்கள் என்பது ஐதீகம். மண் தோன்றும் முன்பே மங்கை தோன்றியது என்பதுதான் வரலாறு. மாணிக்கவாசகரின் இரண்டு பிறவிகள் சம்பந்தப்பட்டது. இங்கு வியாச முனிவர் தவம் இருந்துள்ளார் அவரின் பாதுகை இங்குள்ளது. 3000 ஆண்டுகள் பழமையான இலந்தை மரம் ஸ்தல விருட்சமாக இங்கு உள்ளது.

ஆசியாவிலேயே மிக உயரமான மரகத நடராஜர் இங்கு உள்ளார். வருடம் முழுவதும் சந்தனத்தால் காப்பு பூசப்பட்டிருக்கும் இவர். வருடத்தின் ஒரு நாள் மட்டுமே சந்தனக்காப்பில் இருந்து மரகத வடிவத்தோடு மார்கழி மாத திருவாதிரை அன்று மட்டும் காட்சி தருகிறார்.

இங்கு மூலவர் மங்களநாதர், அம்பாள் மங்கள நாயகி 

இந்த கோவிலில் உச்சிக்காலத்தில் நடக்கும் ஸ்படிக லிங்க பூஜை மிகவும் விசேஷம். அந்த பூஜையில் எண்ணற்ற சித்தர்கள் கலந்து கொள்வதாக ஐதீகம். நடராஜர் சன்னிதியில் நடக்கும் இந்த பூஜை மிகவும் விசேஷமானது. கோவிலின் மற்ற சன்னிதிகள் அடைக்கப்பட்ட உடன் தான் இந்த பூஜை நடக்கும் மிகச்சிறிய ஸ்படிக லிங்கத்திற்கு அபிசேகங்கள் ஆராதனைகள் நடக்கும்.

இதற்கு மட்டும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாணிக்கவாசகரே இந்த பூஜையில் கலந்து கொள்கிறார் என்பது நம்பிக்கை. ஒரு முறை இந்த பூஜையில் தொடர்ந்து கலந்து கொண்டு வாருங்கள் வாழ்வில் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.

From around the web