உலகமே வியந்து போற்றும் போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலையின் ரகசியம் இதுதான்..

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் வீற்றிருக்கும் செந்திலாண்டவரின் சிலை ஒன்பது விதமான மூலிகைகளை பக்குவம் செய்து போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அதை நவபாஷாண சிலை என்று பேர் ஏற்பட்டது. நவ என்றால் ஒன்பது என்று பெயர்.

55f80cb6ea7fa1c33b4527611dc21e36

ஆன்மிக மணம் கமழும் தமிழகத்தில் எண்ணற்ற சித்தர்கள் தோன்றினாலும் அதில், முக்கியானவர்களை தொகுத்து 18 சித்தர்கள் என வகைப்படுத்தி உள்ளனர். 18 சித்தர்களில் போகர் என்ற சித்தரும் ஒருவர். இந்த போகர் சித்தர்தான், தனது சீடரும் 18 சித்தர்களில் மற்றொருவருமான புலிப்பாணி சித்தருடன் இணைந்து கன்னிவாடியில் இருக்கும் மெய்கண்ட சித்தர் குகையில் தங்கி இந்த நவபாஷாண சிலையை உண்டாக்கியதாக குறிப்புகள் சொல்கின்றது.

18 சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் போகர், தனது சீடரும் மற்றொரு சித்தருமான புலிப்பாணியுடன் இணைந்து கன்னிவாடியில் அமைந்திருக்கும் மெய் கண்ட சித்தர் குகையில்தான் இந்த நவபாஷண சிலையைச் செய்தார் என்பது வரலாறு.

நவபாஷணம் என்பது, கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், குதிரைப் பல், லிங்கம், கெளரி பாஷணம், சீதை பாஷணம் என்கிற ஒன்பது வகையான மிக அபூர்வமான மூலிகைகளையும், விஷங்களையும் கொண்டு மிகக்கடினமான செய்முறைகளால் உருவாக்கப்படுவது. இம்மூலிகைகளை இனம்கண்டறியும் திறன் பழங்கால சித்தமருத்துவர்களுக்குக் கூட கிடையாது என்பதுதான் உண்மை. இத்தகைய பெருமைமிக்க நவபாஷண மூர்த்தியை செய்து முடித்த போகர், அதை பிரதிஷ்டை செய்ய செவ்வாயின் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதியைத் தேடினார். அப்போது, அதற்கு பொருத்தமான இடமாக கிடைத்ததுதான் இந்த பழனி மலை.

நவபாஷண சிலையின் சிறப்பம்சமே மனிதனுக்கு ஏற்படுவது போல இரவில் இச்சிலைக்கு வியர்வை வெளியேறும். ‘விஷத்திற்கு விஷமே மருந்து’ என்பது போல நவபாஷண திருமேனியில் இருந்து வெளியேறும் அவ்வியர்வை பல்வேறு நோய்களைக் குணமாக்கக் கூடியது.

2a3a38c61ebcbd8f19c6a61f77b79709

அதனால், இரவில் நடைபெறும் ராக்கால பூஜையின்போது சிலையின் மேனி முழுவதும் சந்தனம் பூசப்படுவதுடன், சிலைக்கு அடியில் வியர்வையை பிரசாதமாக சேகரிக்க ஒரு பாத்திரமும் வைக்கப்படும். மறுநாள் அதிகாலையில் சிலையின் மேனியில் உள்ள சந்தனம் வழித்தெடுக்கப்படும் போது அச்சந்தனத்தில் வியர்வைத் துளிகள் பச்சை நிறமாக ஒட்டிக் கொண்டிருக்குமாம். மேலும், கீழே வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலும் நீர் நிரம்பியிருக்குமாம். இது ‘கெளபீனத் தீர்த்தம்’ என்று அழைக்கப்படும். இந்த நீரும், சந்தனமும் உலகெங்கிலும் காணக் கிடைக்காத அதிசயமான அருமருந்து. இச்சந்தனமும், நீரும் காலை 4 மணி முதலே கோவிலில் குவிந்திருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு!

இந்த சிலையின் மற்றொரு சிறப்பம்சம், சிலையின் பின்புறம் மீன் செதில், மேலிருந்து கீழாக தேய்க்க முடியும், கீழிருந்து மேலாக தேய்த்தால் கையை கிழிச்சுடும் என்பது பலர் உணர்ந்தது. இச்சிலையின்மீது செய்யப்படும் அபிஷேகப்பொருட்கள் மருத்துவகுணம் கொண்டது. இந்த சிலையை செய்யும் முயற்சியில் முதல் முறை தோல்வி அடைந்தது.  மருத்துவகுணம் கொண்ட நவபாஷான சிலைக்கு நேர் எதிரானது அந்த சிலை. அது முழுக்க முழுக்க நஞ்சு. அந்த சிலையை  பழனிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அந்த சிலையின்மீது படும் அனைத்தும் விஷமாகிடும்.  அதனால், சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் அர்ச்சகர்கூட வாயில் துணியை கட்டிக்கொண்டுதான் செய்வார்கள். சிலையின்மீது சாற்றப்படும் பூ, படைக்கப்படும் வெற்றிலை பாக்கு உட்பட அனைத்தையும் கோவில் வளாகத்தினுள் இருக்கும் கிணற்றில் போட்டு மூடி விடுவார்களாம். காற்றிலே நஞ்சு கலக்கும் அளவுக்கு இருப்பதால் அக்கோவிலுக்கு வெளியாட்கள் யாருக்கும் அனுமதி இல்லை..

தமிழர்களின்வாழ்வியல் முறையும், மருத்துவமும் ஆன்மீகத்தை சார்ந்தே இருக்கின்றது. போகரின் நவபாஷாண சிலை உலக மக்களையே வியப்பிற்குள்ளாக்குகிறது என்றால் மிகையாகாது…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.