இன்று ஸ்ரீராமருக்குரிய ஸ்ரீ ராம நவமி

ராமர் பிறந்த ஸ்ரீராம நவமி திருநாள்
 
இன்று ஸ்ரீராமருக்குரிய ஸ்ரீ ராம நவமி

மனிதனாய் பிறந்தால் கஷ்டங்கள் எதுவும் இல்லாத மனிதன் இல்லை. நாட்டின் பிரதமர் ஆக இருந்தாலும் , பணம் கோடி கோடியாய் கொட்டி வைத்திருந்தாலும் ஒரு மனிதனுக்கு எதிர்பாராத கஷ்டங்கள் வந்து விட்டால் அதில் இருந்து மீளூவது கடினம் மனிதனாய் பிறந்து விட்டால் எப்படிப்பட்ட ஆளாய் இருந்தாலும் கஷ்டங்கள், துன்பங்கள், சோதனைகள் வாழ்வில் வந்துகொண்டேதான் இருக்கும் இதை உணர்த்துவதற்காகவே ராம அவதாரம் தோன்றியது.

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி படாத கஷ்டமே இல்லை எனலாம்.  இலங்கை சென்று சீதையை மீட்டு ராவணனை கொன்று அதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கப்பட்டு இறுதியில் ராமேஸ்வரம் வந்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து, விஜயாபதி சென்று யாகங்கள் செய்து தன் பிரம்மஹத்தி தோஷத்தை கழித்ததாக புராணங்கள் சொல்கிறது.

இப்படிப்பட்ட உயர்ந்த அவதாரமான ராமாவதாரம் தோன்றிய இந்த நாளே ஸ்ரீராமநவமி என அழைக்கப்படுகிறது. இன்று அருகில் இருக்கும் கோவில் சென்று ஸ்ரீராமபிரானை மனமார வணங்குவோம் சகல பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு சுபிட்சமான ஒரு வாழ்வை பெறுவோம்.

From around the web