இன்று 20.8.2021 வரலட்சுமி நோன்பு

வரலட்சுமி விரத முறைகள்
 
மஹாலட்சுமி

சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கவும் மற்ற அனைத்து நற்பேருகளுக்காகவும் வேண்டிக்கொள்ளும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும். இந்த வரலட்சுமி விரதத்தை மஹா லட்சுமியை நினைத்து பெண்கள் செய்கின்றனர். சிலர் மகாலட்சுமிக்கு கலசம் எல்லாம் வைத்து வழிபடுகிறார்கள். மஹாலட்சுமிக்குரிய பதிகம் பாடுவதும் ஸ்வீட், காரம், என பட்சணங்கள் செய்தும் வரலட்சுமி விரதம் நோன்பை கொண்டாடலாம்.

மகாலட்சுமியை கலசம் அமைத்து முகம் வைத்து அல்லது அதற்கு பதிலாக தேங்காய் வைத்து அழகாக அலங்காரம் செய்து வீட்டிற்கு அழைப்பது வழக்கம். புதிதாக ஆரம்பிப்பவர்கள் அல்லது இது பற்றிய புரிதல் இல்லாதவர்கள் கலசம் வைக்க வேண்டிய அவசியமில்லை. மகாலக்ஷ்மியின் படம் வைத்து அவர்கள் வழிபடலாம். கலசம் அமைப்பவர்கள் தொடர்ந்து மூன்று வருடம் இந்த பூஜையை செய்வது மிகவும் சிறப்பு. மகாலட்சுமியை முந்தைய நாள் வீட்டிற்கு அழைப்பது உண்டு. 

இன்று மஹாட்சுமிக்குரிய வரலட்சுமி விரதத்திற்கு தங்களால் இயன்ற அளவு பூஜை முறைகளை செய்து மஹாலட்சுமியை தியானம் செய்தும் பதிகங்கள் பாடியும் வழிபடுவது சிறப்பு.

From around the web