மனக்குழப்பம் மனசஞ்சலம் நீங்க

மனக்குழப்பத்தை போக்கும் பரிகாரம்
 
சிவன்

eப்போதும் இனம்புரியாத கவலை உள்ளதா,அல்லது திடீர் திடீரென ஏற்படுகிறதா? அவ்வாறு இருப்பில் ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து அல்லது பகை கிரகத்துடன் இருந்தால், மனக்குழப்பம் அதிகம் இருக்கும். அவ்வாறு அமையப்பெற்றவர்கள் பௌர்ணமி அன்று சந்திரனை தரிசித்து வணங்கி, ‘ஓம் சந்திராய நமஹ’ என்று ஒன்பது முறை சொல்வது உகந்தது.

மேலும், சந்திரனுக்கு உகந்த  பச்சரிசியில் சாதம் வடித்து, தானும் சாப்பிட்டு, தன்னைச் சார்ந்தவர்களும், தான் வளர்க்கும் விலங்குகளுக்கும் அளித்து சாப்பிட வைப்பது மிகவும் நல்லது. மேலும் இதனைத் திங்கட்கிழமை தோறும் செய்து வந்தால் மேன்மையை பெறலாம்.

கடக ராசியில் பிறந்தவர்கள், இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள், திங்கட்கிழமை பிறந்தவர்கள் ஆகியோர் முத்து மாலை, மற்றும் முத்து மோதிரம் அணியலாம். இதனால், சந்திர பகவான் முழு அருளும், ஆசியும் கிடைக்கப்பெற்று மனசாந்தி கிடைக்கப்பெறும்!
 

From around the web