ஆஞ்சநேயர் பிறந்த வரலாற்று ஆதாரம் வெளியிடுகிறது திருப்பதி தேவஸ்தானம்

ஆஞ்சநேயர் பிறந்த அஞ்சனாத்ரி மலை பற்றி
 
ஆஞ்சநேயர் பிறந்த வரலாற்று ஆதாரம் வெளியிடுகிறது திருப்பதி தேவஸ்தானம்

இராமயணத்தின் முக்கிய வீரம் மிகுந்த கதாபாத்திரம் ஆஞ்சநேயர். இவர்தான் ராமர் இலங்கைக்கு செல்ல பாலம் அமைக்க உதவியதாகவும் மேலும் ராமர் சீதையை மீட்க பல்வேறு வழிகளில் ஆஞ்சநேயர் உதவியதாகவும் கூறப்படுகிறது. இப்படி இராமாயணம் முழுவதும் நிறைந்து காணப்படுகிறார்  ஆஞ்சநேயர். 

ஆஞ்சநேயர்தான் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து மக்களை காக்கிறார், ஏழரை சனி போன்ற கொடூர விசயங்களில் இருந்தும், மற்றும் நமக்கு ஏற்படும் தீய விளைவுகள் பலவற்றில் இருந்தும் நம்மை காக்கிறார் என்றும் நம்பிக்கை உள்ளது திருப்பதி அருகேயுள்ள அஞ்சனாத்ரி மலையில் அஞ்சனா தேவி மகனாக பிறந்ததாக கூறப்படுகிறது.

இம்மலையில்தான் ஆஞ்சநேயர் பிறந்ததற்கான முக்கியமான வரலாற்று ஆதாரங்களை தகுந்த ஆதாரங்களுடன் வரும் ஏப்ரல் 13ம் தேதி உகாதி அன்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட இருக்கிறதாம்

From around the web