தேவர்களின் தலைவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை அமரர்கள்தம் பெருமானை அரனை மூவாமருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந் திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாயபெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே விளக்கம் பெருந்தவத்தோர் தொழுது போற்றும் தலைவன், தேவர்கள் தலைவன், தீமைகளை அழிப்பவன், மூப்பு எய்தாமற் செய்யும் அமுதத்தைத் தேவர்களுக்கு உதவிய வலிமையுடையவன். அலைகள் மடங்கி வீழும் கடல், மேம்பட்டமலை,
 
தேவர்களின் தலைவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்

அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
    அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை
    மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
    திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

விளக்கம்

பெருந்தவத்தோர் தொழுது போற்றும் தலைவன், தேவர்கள் தலைவன், தீமைகளை அழிப்பவன், மூப்பு எய்தாமற் செய்யும் அமுதத்தைத் தேவர்களுக்கு உதவிய வலிமையுடையவன். அலைகள் மடங்கி வீழும் கடல், மேம்பட்டமலை, நிலம், வானம், திருத்தமான ஒளியை உடைய விண்மீன்கள், எண்திசைகள், வானத்தில் உலவுகின்ற காய்கதிர், மதியம், பிறவும், ஆகிய பொருள்களில் உடனாய் இருந்து அவற்றைச் செயற்படுத்தும் மேன்மையை உடையவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

From around the web