திருப்புல்லாணி சேதுக்கரையில் ஆதி ஜெகநாதபெருமாள் தீர்த்தவாரி எழுந்தருளல்

 

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் வருடத்திற்கு இருமுறை தேரோட்டம் நடைபெறும். பங்குனி மாதம் இங்குள்ள ஆதி ஜெகநாத பெருமாளுக்கும், சித்திரை மாதம் இங்குள்ள ராமருக்கும் தேர்த்திருவிழா நடைபெறும். அடுத்த நாள் அருகில் உள்ள புண்ணியத்தலமான சேதுக்கரை தீர்த்தத்தில் ஸ்வாமி தீர்த்தவாரி செய்து ஸ்வாமி எழுந்தருள்வார்.

இதற்காக திருப்புல்லாணியில் இருந்து 4 கிமீ தூரம் உள்ள சேதுக்கரைக்கு ஸ்வாமி ரதத்தில் இங்குள்ள சேவார்த்திகள் உதவியுடன் செல்வார்.அந்த வைபவம் நேற்று நடந்தது.

பின்பு ஸ்வாமிக்கு அபிசேகம் அலங்காரம் அனைத்தும் நடந்தது. திருமஞ்சனம் நடந்தது உலக மக்களின் நன்மைக்கு பாராயணங்கள் வாசிக்கப்பட்டது.


 

From around the web