தீராத பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் சிவ மந்திரம்…

விரலுக்கு தகுந்த வீக்கம் இருப்பதுபோல ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கேற்றார்போல பிரச்சனை இருக்கத்தான் செய்யும். பிரச்சனை இல்லாத மனிதனே இல்லை எனலாம். சிலர் தன் மதியால் பிரச்சனைகளை வெல்கின்றனர். ஆனால், சிலருக்கு என்ன யோசித்தும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. பிரச்சனைகள் தீராமல் தவிப்பவர்கள் கீழ்க்காணும் சிவப்பெருமானுக்குரிய மந்திரத்தை சொல்லி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஓம் நம சிவாய ஜெய ஜெய ஓம் ஸ்ரீ நம சிவாய சிவபெருமானை போற்றும் இம்மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்து, உடல்,
 

விரலுக்கு தகுந்த வீக்கம் இருப்பதுபோல ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கேற்றார்போல பிரச்சனை இருக்கத்தான் செய்யும். பிரச்சனை இல்லாத மனிதனே இல்லை எனலாம். சிலர் தன் மதியால் பிரச்சனைகளை வெல்கின்றனர். ஆனால், சிலருக்கு என்ன யோசித்தும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. பிரச்சனைகள் தீராமல் தவிப்பவர்கள் கீழ்க்காணும் சிவப்பெருமானுக்குரிய மந்திரத்தை சொல்லி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் நம சிவாய ஜெய ஜெய

ஓம் ஸ்ரீ நம சிவாய

சிவபெருமானை போற்றும் இம்மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்து, உடல், மனத்தூய்மையோடு பூஜை அறையில் விளக்கேற்றி, ஒரு மனையில் , வடக்கு முகமாக பார்த்தவாறு சம்மணமிட்டு அமர்ந்துக்கொண்டு, மனதை ஒருமுகப்படுத்தி மேற்கண்ட சிவமந்திரத்தினை 108 முறை வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளோ ஜெபித்து வர தீராத பிரச்சனைகள் நீங்கும். மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றும். இதை தினமும் சொல்ல இயலாதவர்கள் மாத சிவராத்திரி, பிரதோசம், திங்கட்கிழமைகளில் சொல்லி வரலாம்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

From around the web