அமைதியாக நடந்த கெங்கையம்மன் சிரசு திருவிழா

குடியாத்தம் சிரசு திருவிழா பற்றியது
 
அமைதியாக நடந்த கெங்கையம்மன் சிரசு திருவிழா

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ளது புகழ்பெற்ற கெங்கையம்மன் கோவில். இங்கு நடைபெறும் சிரசு திருவிழா மிக புகழ்பெற்றது வருடா வருடம் நடக்கும் இவ்விழா புகழ்பெற்ற விழாவாகும். இந்த வருடம் கொரோனா பேராபத்தால் சிற்சில விதிமுறைகளுடன் திருவிழா நடைபெற்றது

ஊரடங்கு என்பதால் எளிமையாக நடைபெற்றது.

இந்த விழா வழக்கமாக அதிகாலை 4 மணி ஆரம்பித்து இரவு 10 மணி வரை வெகு விமர்சையாக நடைபெறும். இதில் கலந்துக்கொள்ள தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்தும் லட்சகணக்கானோர் பங்கேற்பர்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி பல உயிர்களை பலி வாங்கி வருகிறது இதன் காரணமாக அனைத்து மத விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆகம விதிப்படி இந்தத் திருவிழாபை நடத்திக் கொள்ள ஆட்சியர் அனுமதி வழங்கினார். இதனை அடுத்து ஒரு குடையுடனும் 50 நபர்களுடனும் இந்த சிரசு திருவிழா எளிமையாக நடைபெற்றது.

From around the web