நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் இனிதே நடந்தது

ஆஞ்சநேயர் கோவிலும் அர்ஜூனும்
 
ஆஞ்சநேயர் கோவில்

நடிகர்களில் மிகுந்த ஆஞ்சநேயர் பக்தி உள்ளவர் நடிகர். ஆஞ்சநேயர் மீது அளவற்ற பக்தியுடைய அர்ஜூன் சென்னை கெருகம்பாக்கத்தில் நீண்ட நாட்களாகவே ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டி வந்தார். இது பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் வந்து கொண்டிருந்தாலும் கோவில் பற்றிய முழு தகவல்கள் இல்லை. தற்போது ஆஞ்சநேயருக்காக பிரமாண்ட சிலை ஒன்றை கோவிலில் நிறுவியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலங்களில் கோவிலில் உள்ள சில வேலைகளை அர்ஜூனே பார்ப்பது போன்று எல்லாம் புகைப்படங்கள் வெளியானது. அர்ஜீன் கட்டிய இந்த கோவிலின் கும்பாபிசேகம் நேற்று நடந்தது.

திரைப்படத்தில் நடித்தாலும் இது போன்ற ஆன்மிக சேவையால் அர்ஜூனுக்கு மக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது.

From around the web