சதுரகிரியில் சித்தர்கள் வாழும் தவசிப்பாறை

தவசிப்பாறையை பற்றிய விளக்கம்
 

விருதுநகர் மாவட்டமும் மதுரை மாவட்டமும் சேர்ந்த ஒரு இடத்தில் உள்ளது சதுரகிரி மலை. 18 சித்தர்களும் நின்று பேசும் இடமாக பல அற்புதங்களை இன்றளவும் செய்யும் ஒரு இடமாக இந்த சதுரகிரி உள்ளது. இந்த சதுரகிரியில் சுயம்புவாக உள்ள சுந்தரமகாலிங்க சாமி கோவில் உள்ளது. அமாவாசை, பெளர்ணமிக்கு இங்கு திரளும் பக்தர்கள் அதிகம்.

இவர்களை வணங்கி விட்டு அந்த மலைக்கு மேலே சென்றால் தவசிப்பாறையை அடையலாம். முன்பு வனத்துறை இங்கு செல்ல அனுமதி கொடுத்தது. தற்போது இங்கு  கட்டுப்பாடுகள் அதிகம் விதித்துள்ளது வனத்துறை.

இந்த தவசிப்பாறையில்தான் சித்தர்கள் அதிகம் இருப்பதாகவும் சில நேரங்களில் தவசிப்பாறையில் சித்தர்கள் இரவு நேரத்தில் சிவனை நினைத்து

ஆராதனை மற்றும் நடனங்கள் எல்லாம் நிகழ்த்தி இருப்பதாகவும் அவர்கள் ஒளி ரூபத்தில் சிலருக்கு தெரிந்துள்ளதாகவும் எல்லாம் பல பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

ஆன்மிகமும் அமானுஷ்யமும் கலந்த ஒரு அதிசயமான இடமாக தவசிப்பாறை இன்றளவும் காணப்படுகிறது. சதுரகிரிக்கு சென்றால் மேலே தவசிப்பாறைக்கு செல்ல முடியாவிட்டாலும் 18 சித்தர்கள் வாழும் தவசிப்பாறை கீழிருந்தே தத்ரூபமாக தெரியும் கீழிருந்தாவது தவசிப்பாறையை நோக்கி ஒரு கை கூப்பி வணங்கி விட்டு வாருங்கள்.

From around the web