தம்பதியாய் கடவுள் இருக்க காரணம் என்னன்னு தெரியுமா?

அனைத்து உயிர்களும் அடுத்த நொடி எந்த அதிசயம் நிகழுமென்பதை உணரமுடியாத அளவுக்கு நிரந்தரமில்லா வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன. கட்டுப்பாடுகளற்ற வாழ்வில் கடவுள் எனும் பெரும் சக்திகளை உருவாக்கி, அவர்கள் மூலம் கட்டுப்பாடுகளை உணர்த்தி முறையான வாழ்விற்கு வழிவகுத்தனர் நம் முன்னோர்கள். இதில் முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தங்கள் துணைகளின் மூலம் மனித குலத்துக்கு சில நியதிகளை உணர்த்தி உள்ளனர். படைக்கும் கடவுளான பிரம்மா, தன் நாவில் கல்விக்கு அதிபதியான மனைவி சரஸ்வதிக்கு இடமளித்ததன் மூலம்,
 
தம்பதியாய் கடவுள் இருக்க காரணம் என்னன்னு தெரியுமா?

அனைத்து உயிர்களும் அடுத்த நொடி எந்த அதிசயம் நிகழுமென்பதை உணரமுடியாத அளவுக்கு நிரந்தரமில்லா வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன. கட்டுப்பாடுகளற்ற வாழ்வில் கடவுள் எனும் பெரும் சக்திகளை உருவாக்கி, அவர்கள் மூலம் கட்டுப்பாடுகளை உணர்த்தி முறையான வாழ்விற்கு வழிவகுத்தனர் நம் முன்னோர்கள். இதில் முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தங்கள் துணைகளின் மூலம் மனித குலத்துக்கு சில நியதிகளை உணர்த்தி உள்ளனர்.

தம்பதியாய் கடவுள் இருக்க காரணம் என்னன்னு தெரியுமா?

படைக்கும் கடவுளான பிரம்மா, தன் நாவில் கல்விக்கு அதிபதியான மனைவி சரஸ்வதிக்கு இடமளித்ததன் மூலம், நாம் பேசும் வார்த்தைகள் இந்த உலகத்துக்கு நன்மை பயப்பதாகவும் இனிமையாகவும் அமையவேண்டும் என்ற கருத்தினை உலகுக்கு உணர்த்துகிறார்.

தம்பதியாய் கடவுள் இருக்க காரணம் என்னன்னு தெரியுமா?காக்கும் கடவுளான விஷ்ணு தன் இதயத்தில் செல்வத்துக்கு அதிபதியான மனைவி லட்சுமிக்கு இடம் கொடுத்ததன் மூலம், செல்வம் உள்ளவர்கள் பிறருக்கு உதவும் நல்ல இதயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றார். 

தம்பதியாய் கடவுள் இருக்க காரணம் என்னன்னு தெரியுமா?

அழித்தல் தெய்வமான சிவபெருமான் வீரத்துக்கு அதிபதியான பார்வதிக்கு தன் உடலில் பாதியைத் தந்து ஆணும் பெண்ணும் சமம் என்பதையும், தைரியம் மனதிலும், வீரம் உடலிலும் இருக்க வேண்டும் என்றும் உணர்த்துகிறார்.

தம்பதியாய் கடவுள் இருக்க காரணம் என்னன்னு தெரியுமா?

வள்ளி, தெய்வானையோடு முருகன் காட்சியளிப்பது மனிதனுக்கு இச்சா சக்தி, கிரியா சக்தியின் அருள் இருக்க வேண்டுமென்பதே தவிர, இரு மனைவி கட்டி வாழலாம் என்பதல்ல.

இந்த வாழ்வியல் சொல்லாமல் சொல்லவே கடவுளர்கள் தத்தமது மனைவியரோடு நமக்கு காட்சியளிக்கின்றனர்.

From around the web