மூன்று நாளுக்கு பின் இன்று கோவில்கள் திறப்பு

இன்று கோவில்கள் திறப்பு
 
ஸ்ரீரங்கம்

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஏப்ரலில் மூடப்பட்ட கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் திறக்கப்பட்டது. பின்பு ஆடி மாதம் நடைபெறும் முக்கிய விழாக்களால் கூட்டம் கூடுவதால் மீண்டும் அடைக்கப்பட்டது. இருப்பினும் ஆடி அமாவாசை முக்கியமாக கொண்டாடப்படும் ராமேஸ்வரம் போன்ற கோவில்கள் அமாவாசை முடிந்தும் திறக்கப்படவில்லை. கடந்த திங்கட்கிழமை தான் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசின் உத்தரவின்படி வெள்ளி சனி ஞாயிறு அதிக கூட்டம் வரும் விடுமுறை நாட்கள் என்பதால் அன்று மட்டும் கோவில்கள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது மூன்று நாட்கள் முடிந்து இன்று கோவில்கள் திறக்கப்படுகிறது அதனால்  கோவில்கள் செல்லும் அனைவரும் ப்ளான் செய்து செல்லலாம்.

From around the web