சிவராத்திரி விரதமிருந்தால் கிடைக்கும் பலன்

சிவராத்திரி உருவான தகவல்களை ஏற்கனவே பார்த்தாச்சு… சிவராத்திரி விரதமிருந்தால் என்ன பலன் கிடைக்கும்ன்னு இந்த பதிவில் பார்க்கலாம்.. நாம் செய்த இப்பிறவியில் செய்த பாவங்கள் விலகும். பூமிதானம், தங்கதானம், பசுக்கள் தானம், நூறு அசுவமேத யாகம் செய்த பலன் கிசைக்கும். வேடன் ஒருவன் புலி துரத்தலுக்கு பயந்து மரத்தின் மீதேறி அமர்ந்துக்கொண்டான். உறங்கினால் கீழே விழுந்துவிடுவோமோ என்று அஞ்சி, தான் அமர்ந்திருந்த மரத்திலிருந்து இலைகளை பறித்து கீழே போட்டும், இடுப்பிலிருந்த சுரைக்குடுவையிலிருந்த நீரை சொட்டு சொட்டாய் ஊற்றியும்
 
சிவராத்திரி விரதமிருந்தால் கிடைக்கும் பலன்

சிவராத்திரி உருவான தகவல்களை ஏற்கனவே பார்த்தாச்சு… சிவராத்திரி விரதமிருந்தால் என்ன பலன் கிடைக்கும்ன்னு இந்த பதிவில் பார்க்கலாம்..

நாம் செய்த இப்பிறவியில் செய்த பாவங்கள் விலகும். பூமிதானம், தங்கதானம், பசுக்கள் தானம், நூறு அசுவமேத யாகம் செய்த பலன் கிசைக்கும். வேடன் ஒருவன் புலி துரத்தலுக்கு பயந்து மரத்தின் மீதேறி அமர்ந்துக்கொண்டான். உறங்கினால் கீழே விழுந்துவிடுவோமோ என்று அஞ்சி, தான் அமர்ந்திருந்த மரத்திலிருந்து இலைகளை பறித்து கீழே போட்டும், இடுப்பிலிருந்த சுரைக்குடுவையிலிருந்த நீரை சொட்டு சொட்டாய் ஊற்றியும் உறங்காமலிருந்தான். அவன் அமர்ந்திருந்தது வில்வம் மரம், அவன் பறித்து போட்டது அதன் இலைகளை… நீர் ஊற்றியது மரத்தினடியிலிருந்த சிவலிங்கத்தின்மீது,. இன்னதென தெரியாமல் செய்ததன் பலன்?! பிறவா நிலையான முக்தி நிலை!!!

சிவராத்திரி விரதமிருந்தால் கிடைக்கும் பலன்.

பிரம்மா தவமிருந்து சரஸ்வதி தேவியையும், விஷ்ணு தவமிருந்து மகாலட்சுமியை மனைவியாய் பெற்றது இதே நாளில்தான். எனவே நல்ல துணை வாய்க்க, திருமணமாகாதோர் இந்நாளில் விரதமிருப்பது நலம். சிவராத்திரி அன்று வில்வ மரத்தடியில் அம்மையும் அப்பனும் ஒரு மரத்தின்கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவதை மரத்தின் மீது இருந்த குரங்கு ஒன்று கேட்டது. தான் உறங்காமலிருக்க மரத்தின் இலைகளை பறித்து அம்மையப்பன் காலடியில் போட்டது. நாலு காலமும் விழித்திருந்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததை ஏற்றுக்கொண்ட அம்மையப்பன் அக்குரங்கிற்கு மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்த பலனும், அடுத்த பிறவியில் முகுந்த சக்ரவர்த்தியாக பிறக்க அருளினார். சிவராத்திரி மகிமையை உலகம் அறிய குரங்கு முகத்தோடவே தான் பிறக்க வரம் கேட்டது குரங்கு. அப்படியே முகுந்த சக்ரவர்த்தியை பிறக்க வைத்தார்.

சிவராத்திரி விரதமிருந்தால் கிடைக்கும் பலன்
ஆதிசேஷன் அதிக உடல்பலம் வேண்டி சிவப்பெருமானை கும்பக்கோணம் அருகில் உள்ள நாகேஸ்வரத்தில் முதல் காலமும், நாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை இரண்டாம் காலத்திலும், திருப்பாம்புரத்திலுள்ள பாம்புரேஸ்வரரை மூன்றாம் காலத்திலும், நாகூரிலுள்ள நாகேஸ்வரை நாங்காம் காலத்திலயும் வழிப்பட்டு ஆதிஷேசன் பேறுகள் பெற்றான். படிப்பறிவில்லாத வேடுவன் கண்ணப்ப நாயனாராய் மாறிய நாளும் இந்நாளே! சிவராத்திரிக்கு மறுநாள் சிவப்புராணம் படித்தோ அல்லது கேட்டோ பகல் பொழுதை கழித்து மாலை வேலையில் பூஜை செய்து அன்றிரவு எதும் உண்ணாமல் உறங்கி விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு விரதத்தை அனுஷ்டித்தால் வாழ்வில் எல்லா நலத்தையும் அருள்வதுடன் முக்தியையும் இறைவன் அளிப்பதோடு அவர்களின் மூவேழு தலைமுறைகளின் பாவங்கள் கலையப்பட்டு முக்தி கிட்டும்.

சிவாய நம! ஓம் நமச்சிவாய!

From around the web