சிவபெருமானின் எட்டுவகை குணங்களை தெரியுமா?!

சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்?சிவம் என்ற சொல்லுக்கு “செம்மை” (பூரணத்துவம்), “மங்களமானது” என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவருமான இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம். சிவபெருமான் எப்படிப்பட்டவர்? அவரின் குணநலன் என்னவென தெரியுமா?! ,என்றும் உள்ளவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர், தூயவர், அழிவிலா இன்பம் உடையவர், யார்க்கும் ஆட்படாதவர்.சிவபெருமானின் குணசங்கள் எட்டு என சொல்லப்படுகின்றது. அவை1.முழுதும் தன்வயத்தனாதல் (பிறருக்கு ஆட்படாதவர்)2.இயற்கை அறிவினனாதல் (உள்ளதை உள்ளவாறே
 
சிவபெருமானின் எட்டுவகை குணங்களை தெரியுமா?!

சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்?
சிவம் என்ற சொல்லுக்கு “செம்மை” (பூரணத்துவம்), “மங்களமானது” என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவருமான இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.

சிவபெருமான் எப்படிப்பட்டவர்? அவரின் குணநலன் என்னவென தெரியுமா?!

,என்றும் உள்ளவர், எங்கும் நிறைந்தவர்,  எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர், தூயவர், அழிவிலா இன்பம் உடையவர், யார்க்கும் ஆட்படாதவர்.
சிவபெருமானின் குணசங்கள் எட்டு என சொல்லப்படுகின்றது. அவை
1.முழுதும் தன்வயத்தனாதல் (பிறருக்கு ஆட்படாதவர்)
2.இயற்கை அறிவினனாதல் (உள்ளதை உள்ளவாறே அறிதல்)
3.முற்றறிவு உடைமை (எல்லாவற்றையும் அறியும் திறம்)
4.தூய உடம்பினன்
5.இயல்பாகவே மலமற்றவன்
6.வரம்பில்லாத ஆற்றல் உடையவன்
7வரம்பில்லாத அருள் உடையவன்
8வரம்பில்லாத இன்பம் உடையவன்..

இந்த எட்டுவகை குணநலன்களை உடையவர் என சிவபுராணம் சொல்கிறது..

தென்னாடுடைய சிவனே போற்றி!.. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

From around the web