பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்றுசேர இந்த விரதம் இருங்க!

அஷ்டமி, நவமி திதியில் நல்ல காரியங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள், அதனால் இரு திதிகளும் தங்களை மனிதர்கள் ஒதுக்கி தள்ளுவதால் மனம் நொந்து விஷ்ணு பகவானிடம் புலம்பியது. அவற்றின் குறையை போக்க ராமன் நவமி திதியிலும், கிருஷ்ணன் அஷ்டமி திதியிலும் அவதரித்தனர். பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீராமர் பிறந்த தினமாய் கொண்டாடுகின்றனர். ஒரு மனிதன் மகனாய், சகோதரனாய், கணவனாய், தலைவனாய், தொண்டனாய், எதிரியாய் எப்படியெல்லாம் வாழவேண்டுமென வாழ்ந்து காட்டவே
 
பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்றுசேர இந்த விரதம் இருங்க!

அஷ்டமி, நவமி திதியில் நல்ல காரியங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள், அதனால் இரு திதிகளும் தங்களை மனிதர்கள் ஒதுக்கி தள்ளுவதால் மனம் நொந்து விஷ்ணு பகவானிடம் புலம்பியது. அவற்றின் குறையை போக்க ராமன் நவமி திதியிலும், கிருஷ்ணன் அஷ்டமி திதியிலும் அவதரித்தனர். பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீராமர் பிறந்த தினமாய் கொண்டாடுகின்றனர்.

பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்றுசேர இந்த விரதம் இருங்க!

ஒரு மனிதன் மகனாய், சகோதரனாய், கணவனாய், தலைவனாய், தொண்டனாய், எதிரியாய் எப்படியெல்லாம் வாழவேண்டுமென வாழ்ந்து காட்டவே மனிதனாய் விஷ்ணு பகவான் அவதரித்த அவதாரமே ஸ்ரீராம அவதாரம். ராமாயண கதை நம் எல்லோருக்குமே தெரியும். இன்று எப்படியெல்லாம் ராம நவமி கொண்டாடுகின்றனர் என்பதை பார்ப்போம்..

பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்றுசேர இந்த விரதம் இருங்க!

ராமநவமி அன்று அதிகாலை எழுந்து நீராடி, வீடு, பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்து, வாசலில் கோலமிட்டு, செம்மண் வரைந்து, மாவிலை தோரணம் கட்டி, பூஜை அறையில் பட்டாபிஷேக ராமர் படத்திற்கு பூச்சூடி, பொட்டு வைத்து பூஜைகள் செய்யப்படும். தயிர் சாதம், பானகம், மோர் மாதிரியான நைவேத்தியங்கள் படைத்து ராம நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும். ஸ்ரீராமர் பிறந்தது, நன்றாக அனல் கொளுத்தும் வெய்யில் காலத்தில். அதனால்தான் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடைபருப்பு, விசிறி போன்றவற்றைத் தானமாகக் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் பிறந்ததை தசரதர் அரண்மனையில் கோலாகலமாகக் கொண்டாடினார். “மக்களுக்கு நிறைய தான தர்மங்கள் செய்தார். அதை மனதில் கொண்டு இன்றும் கிராமங்களில் பல வீடுகளில் நெல் மணிகளும் பணமும் வைத்து தானமளிப்பது வழக்கமாக உள்ளது.

பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்றுசேர இந்த விரதம் இருங்க!

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், ராமர் 14 ஆண்டுகள் வன வாசம் இருந்த போதும், நீர் மோரையும், பானகத்தையும் தாக சாந்தியாக அருந்தினாராம். அதனால் ராம நவமியில், ராமனுக்கு நீர் மோர், பானகம் படைப்பது முக்கியம். பூஜை கைங்கரியங்கள் செய்வதோடு, ஸ்ரீராம நாமம் ஜெபிப்பதும், ராம நாமத்தை பிறர் சொல்லக்கேட்பதும், ஸ்ரீராமபிரானுடைய திருநாமத்தை எழுதுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும்.
ராமாயணம் படிக்க இயலாதவர்கள், ஸ்ரீராம…. ஸ்ரீராம என்று சொன்னாலே ராமாயணம் படித்த புண்ணியம் கிடைக்கும். மாலையில், பானகம் (வெல்லம், ஏலக்காய், கிராம்பு ஆகியவை கலந்த நீர் ), நீர் மோர் , ஊற வைத்த பயத்தம் பருப்பில், தாளித்து கொட்டி உப்பு கலந்து வைப்பது , இவற்றை கடவுளுக்குப் படைத்தது விட்டு நாம் உண்ணலாம். .

பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்றுசேர இந்த விரதம் இருங்க!

முடிந்தால் உபவாசம் இருப்பது நலம், இப்படி உபவாசம் இருந்தால் 24 ஏகாதசிகள் தொடர்ந்து விரதமிருந்த பலன் கிடைக்கும். இன்றைய தினம் ராமரோடு அனுமனையும் வணங்கினால் மிகுந்த நலன் பயக்கும். ராம நவமியில் விரதமிருந்தால் நல்ல பிள்ளைகள் பிறக்கும். சிறந்த வாழ்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குமிடையேயான பிணக்குகள் தீரும். பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும்.

ஜெய் ஸ்ரீ ராம்

From around the web