பரம்பொருளை சிறப்பிக்கும் சூரிய விரதம்

கடவுள் நம்பிக்கை இல்லாதவங்கக்கூட இயற்கையை கடவுளாய் கொண்டாடுவாங்க. சூரியனிலிருந்துதான் இந்த உலகம் உண்டானதுன்னு சொல்வாங்க. சூரியன் இல்லாவிட்டால் உலகத்தின் இயக்கமே நின்று போய்விடும். அப்படிப்பட்ட சூரிய பகவானின் அருளை பெற்று தரும் “ஞாயிறு விரதம்” அல்லது “சூரிய விரதம்” மேற்கொள்ளும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடுவதற்கென விரதமுறைகள் இருக்கு. அந்த வகையில் உலகிற்கு ஒளியை தந்து, அனைத்திற்கும் உயிராற்றலை தருகின்ற சூரிய பகவானின் அருளை
 

கடவுள் நம்பிக்கை இல்லாதவங்கக்கூட இயற்கையை கடவுளாய் கொண்டாடுவாங்க. சூரியனிலிருந்துதான் இந்த உலகம் உண்டானதுன்னு சொல்வாங்க. சூரியன் இல்லாவிட்டால் உலகத்தின் இயக்கமே நின்று போய்விடும். அப்படிப்பட்ட சூரிய பகவானின் அருளை பெற்று தரும் “ஞாயிறு விரதம்” அல்லது “சூரிய விரதம்” மேற்கொள்ளும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

The seven horses of the suns chariot

ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடுவதற்கென விரதமுறைகள் இருக்கு. அந்த வகையில் உலகிற்கு ஒளியை தந்து, அனைத்திற்கும் உயிராற்றலை தருகின்ற சூரிய பகவானின் அருளை பெற்று தரும் “ஞாயிறு விரதம்” அல்லது “சூரிய விரதம்” மேற்கொள்ளும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இன்று பார்க்கலாம்.

Surya narayan

“ஞாயிறு விரதம்” அல்லது “சூரிய விரதம்” இருக்க விரும்புவர்கள் எல்லா காலங்களிலும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம். ஆனாலும் “ஐப்பசி” மாத வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது சிறப்பானதாகும். இந்த ஞாயிறு விரதத்தை எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து , சூரியன் உதிக்கின்ற காலைவேளையில் சூரியனை தரிசித்தவாறே, அவருக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

Surya Narayan son god  From Hindu Cosmic  Tumblr

பின்பு நவகிரக சந்நிதிக்கு சென்று சூரிய பகவானுக்கு செந்தாமரை பூ அல்லது சிவப்பு நிற மலர்களை சூட்டி, கோதுமையை சிறிதளவு வைத்து, நெய் தீபங்கள் ஏற்றி, வாசனை மிக்க தூபங்கள் கொளுத்தி, கோதுமையால் செய்த இனிப்பு உணவுகளை நைவேத்தியமாக வைத்து சூரிய பகவானின் காயத்ரி மந்திரங்கள், பீஜ மந்திரங்கள் போன்றவற்றை 108 எண்ணிக்கை அல்லது 1008 எண்ணிக்கையில் துதித்து வழிபட வேண்டும். இந்த விரதம் இருப்பவர்கள் அந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும் திடஉணவு சாப்பிடாமல் நோன்பிருந்து மறுநாள் காலையில் சூரிய தரிசனம் செய்த பின்பு, சூரிய பகவானுக்கு வீட்டிலேயே பாத்திரத்தில் சிறிது நீர் நிவேதனமாக அளித்த பின்பே விரதத்தை முடிக்க வேண்டும். கர்ப்பிணிகள், நோய்வாய்ப்பட்டவர்கள், நீராகாரம், பழச்சாறுகள் போன்றவற்றை அருந்தி விரதமிருக்கலாம்.

சூரிய விரதம் மேற்கொள்ளும் நபர்களுக்கு உடல் ஆரோக்கியம் கூடும். கொடிய நோய்கள் ஏதும் அண்டாது. முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும். சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும். உடல்நலம் மேம்பட்டு அவரின் ஆயுள் நீடிக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரிகம் போன்றவை சூரிய விரதம் இருப்பவர்களை அண்டாது.

சூரியனின் மூல மந்திரம்

ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய ஆதித்யாய ஸ்வாஹா

From around the web