பஞ்சபூதங்களும் அவனே! – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் ஊனாய்உயி ரானாய்உட லானாய்உல கானாய் வானாய்நில னானாய்கட லானாய்மலை யானாய் தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆனாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம்… பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! .
 
பஞ்சபூதங்களும் அவனே! – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்

ஊனாய்உயி ரானாய்உட 
லானாய்உல கானாய்
வானாய்நில னானாய்கட 
லானாய்மலை யானாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் 
நல்லூரருட் டுறையுள்
ஆனாய்உனக் காளாய்இனி 
அல்லேன்என லாமே

விளக்கம்…

பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

.

From around the web