திறமை இருந்தும் வாழ்க்கை எதுவும் அமையவில்லையா- பஞ்சபைரவர்களை வழிபடுங்கள்

நல்லதொரு வாழ்க்கை அமைய பஞ்சபைரவர் வழிபாடு செய்யுங்கள்
 
கும்பகோணத்தை அடுத்துள்ளtது  வலங்கைமான் இதன் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. (ஆ என்றால் பசு ). 

இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குவதாக ஐதீகம்.

இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு இந்த கோவிலின் சிறப்பு. பிதுர் தோஷம் உள்ளவர்கள்  பிதுர் சம்பந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த பைரவரை வணங்கி பூஜையில் ஈடுபட்டால் உடனடி பலன் கிடைக்கும் என்பது ஆழமான நம்பிக்கை. சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர். ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள்.

ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் "பிதுர் தோஷமே ". பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம். அதனால் இந்த ஆவூர் பைரவரை வணங்கி வாழ்வில் நிம்மதி பெறுங்கள்.
 

From around the web