விநாயகர் முன் சத்தியப்பிரமாணம்

வரசித்தி விநாயகர் ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற கோவில்
 
விநாயகர் முன் சத்தியப்பிரமாணம்

ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில் காணிப்பாக்கம் விநாயகர் கோவில். பொதுவாக விநாயகர் காரியத்தடைகளை அகற்றுவார் என்பது நம்பிக்கை. இவரை வணங்கினால் காரியத்தடைகள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கை. அதிலும் காணிப்பாக்கம் விநாயகர் அதிக சக்தி உள்ளவர் என்பதால் இவரை காண அதிக கூட்டம் வருகிறது. திருப்பதிக்கு அதிக பக்தர்கள் செல்வதால் அவர்கள் எல்லோரும் இக்கோவிலுக்கு விசிட் அடித்தே செல்கின்றனர்.

விநாயகர் சுயம்புவாக அருள்பாலிக்கிறார் இவர் இங்குள்ள கிணறு ஒன்றில் சுயம்புவாக தோன்றியவர் என கூறப்படுகிறது. அந்த கிணறு இன்றும் உள்ளது.

கணவன் மனைவி பிரச்சினை, கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் உள்ளிட்ட நம் மனதை வருத்திக்கொண்டிருக்கும் எந்த பிரச்சினையானாலும் இந்த விநாயகரை வணங்கினால் நிவர்த்தி பெறும் என்பது நம்பிக்கை.

தினமும் மாலை சத்தியப்பிரமாணம் என்ற நிகழ்ச்சி இந்த கோவிலில் நடக்கிறது. கடன் வாங்கி ஏமாற்றியவர்கள். இன்னும் பல குற்றங்கள் செய்து ஏமாற்றியவர்கள் இந்த விநாயகரை முன் சத்தியப்பிரமாணம் நிகழ்ச்சியில் கலந்து பொய் சத்தியம் செய்தால் விநாயகர் முன் தப்பிக்க முடியாது என்பது நம்பிக்கை.

From around the web