நேர்த்திக்கடன் -தேவாரம் பாடலும் விளக்கமும் -4

பாடல் கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன் ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிடஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. விளக்கம் கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ்செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய் முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய
 
SHIVA ART : Photo

பாடல்


கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

விளக்கம்

கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ்செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய் முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப்போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளைமீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன்.

சூலைநோயால் வாடிய திருஞானசம்பந்தர் தன் நோய் தீர்க்க திரு அதிகையில் வாழும் சிவபெருமானை வேண்டிக்கொள்கிறார். அப்படி தன் நோய் தீர்த்தால் காலமிருக்கும் வரைக்கும் சிவத்தொண்டு புரிவதாய் வேண்டிக்கொள்கிறார்.

தேவாரம் பாடலும் விளக்கமும் தொடரும்..

From around the web