நாளை வரலட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம் இதோ..

எத்தனை செல்வம் இருந்தாலும் பெண்ணுக்கு கணவன் இல்லையென்றால் சமூகத்தில் மதிப்பிருக்காது. கூனோ, குருடோ கணவனை முன்னிறுத்தியே பெண்களுக்கு மரியாதை. கணவனின் நீள் ஆயுள், ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமைக்காக பெண்கள் இருக்கும் விரதங்களில் வரலட்சுமி விரதம் முக்கியமானது.. வரலட்சுமி விரதத்தினை ஆடி 3ம் வெள்ளி அல்லது ஆடி 4ம் வெள்ளியில் பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படும். அதன்படி 2020 ஆண்டுக்கான வரலட்சுமி விரதம் நாளைய தினம் (31/7/2020) கொண்டாடப்பட இருக்கிறது.. வரலட்சுமி விரதம் பூஜை செய்யவும், பூஜை கயிற்றை
 

எத்தனை செல்வம் இருந்தாலும் பெண்ணுக்கு கணவன் இல்லையென்றால் சமூகத்தில் மதிப்பிருக்காது. கூனோ, குருடோ கணவனை முன்னிறுத்தியே பெண்களுக்கு மரியாதை. கணவனின் நீள் ஆயுள், ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமைக்காக பெண்கள் இருக்கும் விரதங்களில் வரலட்சுமி விரதம் முக்கியமானது..

வரலட்சுமி விரதத்தினை ஆடி 3ம் வெள்ளி அல்லது ஆடி 4ம் வெள்ளியில் பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படும். அதன்படி 2020 ஆண்டுக்கான வரலட்சுமி விரதம் நாளைய தினம் (31/7/2020) கொண்டாடப்பட இருக்கிறது..

வரலட்சுமி விரதம் பூஜை செய்யவும், பூஜை கயிற்றை கட்டிக்கொள்ளவும் நல்ல நேரத்தினை ஜோதிட வல்லுனர்கள் வகுத்துள்ளனர்.. அதன்படி நாளைய தினம்..

சிம்ம லக்னம் பூஜைக்கான உகந்த நேரம் (காலை) – 06:59 முதல் 09:17 வரை (காலம் – 02 மணி 17 நிமிடங்கள்)

விருச்சிக லக்னம் பூஜைக்கான உகந்த நேரம் (பிற்பகல்) – 01:53 முதல் 04:11 வரை (காலம் – 02 மணி 19 நிமிடங்கள்)

கும்ப லக்னம் பூஜைக்கான உகந்த நேரம் (மாலை) – 07:57 முதல் 09:25 வரை (காலம் – 01 மணி 27 நிமிடங்கள்)

ரிஷப லக்னம் பூஜைக்கான உகந்த நேரம் (நள்ளிரவு) – 12:25 முதல் 02:21, ஆகஸ்ட் 01 (காலம் – 01 மணி 56 நிமிடங்கள்)

மற்ற லக்னகாரர்கள் அன்று நல்ல நேரம் வரக்கூடிய காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் அல்லது மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை பூஜை செய்யலாம்.

அம்மனை தொழுது குடும்ப ஒற்றுமை, தீர்க்காயுள், நற்குழந்தைபேறு பெற்று தீர்க்க சுமங்கலியாய் வாழ அனைத்து மகளிருக்கும் அன்னையின் அருள் கிட்டட்டும்.

From around the web