வீட்டில் மயில் இறகு  வைத்தால் தோஷம் நீங்குமா?

மயில் இறகு  என்றாலே மனதில் உற்சாகம் பிறக்கின்றது. சிறு வயதில் பலரும் மயில் இறகு குட்டு போடும் என்று ஒரு புத்தகத்தில் வைத்து இருந்தோம்.
 

மயில் இறகு  என்றாலே மனதில் உற்சாகம் பிறக்கின்றது. சிறு வயதில் பலரும் மயில் இறகு குட்டு போடும் என்று ஒரு புத்தகத்தில் வைத்து இருந்தோம். அது குட்டி போடும் என்ற நம்பிக்கையில் அதனை  வைத்து அழகு பார்த்து கொண்டு இருந்தோம். மேலும், மயில் முருகப்பெருமானின் வாகனம் என்பதால் அதன் இறகு  புனிதமாக கருதப்படுகிறது. முருகன் கோவில்கள் மற்றும் காவடி எடுக்கும் பொழுது மயிலிறகு தான் பயன்படுத்துவார்கள். பண்டைய  காலத்தில் தீ காயங்கள், போர் காலத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு இந்த மயிலிறகினால் மருந்து பூசுவார்கள்.

Mayiliragu

பல்வேறு சிறப்புக்கள் கொண்ட மயிலிறகுகள் வீட்டில் வைத்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. வீட்டில் எட்டு எண்ணிக்கையில் மயில் இறகை  வைத்தால் வாஸ்து குறைபாடுகள் நீக்கும்  என்பது நம்பிக்கை.  இதனை எங்கு வைக்கலாம், எப்படி இதனை வைக்கலாம் என்பதை பார்க்கலாம். வீட்டின் பூஜை அறையில், ஹால் ரூமில் வைக்கலாம். பூஜை அறையில் எட்டு இறகு  சேர்த்து ஒரு வெள்ளை துணியால் அல்லது வெள்ளை நூலில் கட்டி "ஓம் சோமாய  நமஹே" என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்.

வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பது போன்று தோன்றினால் வாசற்படியில் இதனை வைக்கலாம். குறிப்பாக இதனை வைப்பதன் மூலம் பூச்சிகள் வீட்டில் தங்காது. இந்த இறகை பார்த்தால் அதற்கு ஏதோ பார்த்து கொண்டே இருப்பது போன்று தோன்றும் என்பதால் அந்த பக்கமே தலை வைத்து கூட இருக்காது என்றே கூறலாம். வீட்டின் அலமாரி, பணப் பெட்டி வைக்கும் இடத்தில்  வைத்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்பது  நம்பிக்கை.

Mayiliragu

வீட்டில் இருக்கும் தோஷங்கள் மட்டுமில்லாமல் கிரஹத்தால் தோஷம் இருப்பவர்கள் கூட இதனை வீட்டில் வைத்து கொள்ளலாம். குறிப்பாக சனி தோஷம் உள்ளவர்கள் மூன்று மயில் இறகு சேர்த்து ஒரு கருப்பு துணி அல்லது நூலில் கட்டி வைத்து விட வேண்டும். பிறகு ஓம் சனீஸ்வர நமஹே  என்ற மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரம் சனிக்கிழமை அன்று இருபத்தியொரு முறை கூறினால் சனி கிரக தோஷம் நிவர்த்தியாகும்.

Mayiliragu

தம்பதியர்கள் பிரச்சனைகள் அடிக்கடி வருவது, வீண் வாக்குவாதம் போன்றவற்றை தவிர்க்க மயில் இறகு பயன்படுத்தலாம். புதியதாக திருமணம் ஆன தம்பதியர்கள் படுக்கை அறையில் இதனை வைத்து கொண்டால் அந்நோன்யம் இருக்கும் என்பது நம்பிக்கை. மயிலிறகு வைப்பதால் பூச்சிகள், பல்லி தொல்லைகளும்  நீங்கிவிடும்.

From around the web