மனிதன் சொல்ல தெய்வம் எழுதிய திருவாசகம்

இந்தியாவில் பல சமயங்கள் இருந்தாலும் சைவம், வைணவம், சமணம் என்ற மூன்று சமயப்பிரிவுகளுக்குள்ளே பலமான போட்டி நிலவியது. ஒரு காலக்கட்டத்தில் வைணவம் பின்தங்கிவிட, சைவமும், சமணமும் சரிக்கு சமமாய் மல்லுக்கட்டி நின்றது. கூடவே புத்த மதமும் சேர்ந்து மும்முனை போட்டியாய் இருந்தது. தான, தர்மம் செய்து பல கோவில்கள் கட்டி மன்னர்கள் தத்தமது சமயத்தை நிலைநாட்டி வந்ததுப்போல், தமிழ் கற்ற பெருமகனார்கள் தமது வாதத்திறமையால் பலரை சைவத்தின்பால் வரச்செய்தனர். அதில் 63 நாயன்மார்களில் முக்கியமானவர்களாய் சொல்லப்படும் அப்பர்,
 
மனிதன் சொல்ல தெய்வம் எழுதிய திருவாசகம்

இந்தியாவில் பல சமயங்கள் இருந்தாலும் சைவம், வைணவம், சமணம் என்ற மூன்று சமயப்பிரிவுகளுக்குள்ளே பலமான போட்டி நிலவியது. ஒரு காலக்கட்டத்தில் வைணவம் பின்தங்கிவிட,  சைவமும், சமணமும் சரிக்கு சமமாய் மல்லுக்கட்டி நின்றது. கூடவே புத்த மதமும் சேர்ந்து மும்முனை போட்டியாய் இருந்தது. தான, தர்மம் செய்து பல கோவில்கள் கட்டி மன்னர்கள் தத்தமது சமயத்தை நிலைநாட்டி வந்ததுப்போல், தமிழ் கற்ற பெருமகனார்கள் தமது வாதத்திறமையால் பலரை சைவத்தின்பால் வரச்செய்தனர். அதில் 63 நாயன்மார்களில் முக்கியமானவர்களாய் சொல்லப்படும்  அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் எனப்படும் நால்வரின் பங்கு அளப்பறியது.

மனிதன் சொல்ல தெய்வம் எழுதிய திருவாசகம்

 புத்த குருமார்களை வாதத்தில் வென்று சைவத்தை நிலைநாட்டி தில்லையிலேயே சிவத்தொண்டு புரிந்து சிவனையே நினைந்துருகி வாழ்ந்து வருகிறார் மாணிக்கவாசகர். வழக்கம்போல் தில்லை நாதனை வேண்டிட ஆலயத்தினுள் நுழைந்தார் மாணிக்கவாசகர்.  தம்மை ஆட்கொண்ட ஈசனை வேண்டிவிட்டு திருக்கோவிலின் மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார். அவரை பார்த்து வணக்கம் சொல்லி ஆசிர்வாதம் பெற்றும் மக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது முப்புரி நூல் தரித்த உடல், முகம் முழுக்க பிரகாசமளிக்கும் திருநீறு என  அந்தணர் ஒருவர் மாணிக்கவாசகரை சந்திக்கிறார். அந்தணர், மாணிக்கவாசகரை வணங்கி “ஐயா, நான் இந்த ஊரைச் சார்ந்த அந்தணன் தங்களின் பாடலை பலமுறை கேட்டுள்ளேன் . அதை நானும் பாராயணம் செய்ய விரும்புகிறேன். அற்காக உங்களின் பாடலைக் குறிப்பாய் எழுதிக்கொள்ள விருப்புகிறேன். அதனால் தங்களை தேடி தங்களது இல்லத்திற்கு சென்றேன்.   நீங்கள் ஆலயத்தில் இருப்பதாக சொன்னார்கள். அதனால் இங்கு வந்தேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.  நீங்கள் பதிகத்தை சொல்லுங்கள் நான் எழுதிக் கொள்கிறேன்.  என பணிந்து நின்றார்.

மனிதன் சொல்ல தெய்வம் எழுதிய திருவாசகம்

மாணிக்கவாசகருக்கு அந்த ஒளி பொருந்திய முகத்தை எங்கோ பார்த்த ஞாபகம் . ஆனாலும் எங்கென பிடிபடவில்லை. குறிப்புகளை கேட்ட அந்தணருக்கு மறுக்காமல் மறுமொழியளிக்கிறார்.. ஆகட்டும்_அய்யனே!  என திருவாய் மொழிகிறார் திருவாசகத்தை …. அந்தணரும் எழுத ஆரம்பிக்கிறார்.. மாணிக்கவாசகரும் தம் திருவாசகத்தை ஒருபாடல் விடாமல் உரைத்து முடிக்க.. “அய்யனே! சிற்றம்பலத்தானை பாட்டுடைத் தலைவனாக்கி திருக்கோவைப் பதிகம் ஒன்று_படைப்பீர்” என்று அந்தணர் கேட்க, அதற்கும் மாணிக்கவாசகர் மறுக்காமல் கோவைப்பதிகத்தை பாடி முடிக்கிறார்.

பாடி முடிக்கும் தறுவாயில்தான் உணர்கிறார் தன் எதிரில் அமர்ந்திருப்பதும், தம் வாய் மொழியை எழுத்தாய் வடிப்பதும் தன் அப்பன் ஈசன்தான் என்று உணர்ந்து முகம் காண தலை நிமிர்கிறார். கணப்பொழுதியில் எழுதியதை கயிற்றால் ஓலைச்சுவடியை கட்டிக்கொண்டு மாயமானார் அந்தணர் வடிவிலான ஈசன். மாணிக்கவாசகரும் ஆலயம் முழுக்க எங்கு தேடியும் கிடைக்கவில்லை.. நடந்ததை உணர்ந்தவர் ‘ஆட்கொண்ட இறைவன் தம்முன்னிருந்தும் கண்டுகொள்ளாமல் விட்டேனே!! ‘ஈசனே உம் திருவிளையாடலை நிகழ்த்தியே கொண்டுள்ளீர் எம்மிடம்’ என்று எண்ணி தன் நிலை நினைத்து வருந்தியும், ஈசனுடனிருந்ததை நினைத்து சிலிர்த்தும் நின்றார் மாணிக்கவாசகர்.

மனிதன் சொல்ல தெய்வம் எழுதிய திருவாசகம்

அந்தணர் வடிவில் வந்த சிவனோ ஓலைச் சுவடியினை சிற்றம்பலத்தின் கருவறை வாயிற்படியில் வைத்து மறைந்தார். மறுநாள் காலை எப்பொழுதும்போல் தில்லை நடராஜரின் பூஜைக்காக வந்த அந்தணர்கள் ஓலைச் சுவடியைப் பார்த்தனர். ஓலைச்சுவடிகளை எடுத்து பார்த்தனர்.  அதில் அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது என்றிருந்தது. நாடி நின்று எகிறியவராய் ஒரு கணம் மூர்ச்சையடைந்து ‘என்ன விந்தையிது!! இந்த ஓலை எப்படி இங்கு வந்தது?! யார் இவ்விடத்தில் வைத்தது?! எம் ஈசனின் பெயர் இதுலுள்ளதே எப்படி?! என்று சிந்தித்து, சிவனையே வேண்டி மூவாயிரமவர் சபையில் வைத்தார் இந்த அதிசய ஓலைச்சுவடியை..

.
அக்கூட்டத்தில் “ஈசனே வந்தாரா அவர்தான் வைத்து சென்றாரா?!” என்று ஒருவர் கேட்டார். “அழகிய சிற்றம்பலமுடையான் என்றுள்ளது, அவரைத்தவிர வேறு யாராய் இருக்கும்” என்று ஒருவர் சொல்ல… ஈசன் இதன் மூலம் எதையோ சொல்ல விழைகிறார். ஐயா! அந்த ஓலைச்சுவடியினை யாராவது பிரித்து படியுங்கள் ஈசன் என்ன அருளியுள்ளார் என்பதை அறிவோம்” என்றார் மற்றொருவர். இறுதி முடிவாய் மூவாயிரமவர் தலைவர் சிவனை மனதில் நினைத்து கைத்தொட்டு ஓலைச்சுவடியினை வணங்கிப் பிரித்து படித்தார்..


அதில் திருவாசகமும் , ஈசனை தலைவனாய் கொண்ட திருகோவைப்பதிகமும் இருந்தது. படிக்கும்போதே தலைவருக்கு ஒருபுறம் இதன் மூலவிளக்கத்தை பெறும் ஆவல் மேலொங்கி கொண்டிருந்தது. அதைக்கேட்டு நின்ற மற்றவர்களின் எண்ணமும் அவ்வாறே இருந்தது. இறுதி ஓலையில் திருவாதவூரார் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது என்றிருந்தது. மீண்டும் திருவாதவூரரான மாணிக்கவாசகரைக் கொண்டே ஈசன் எதையோ உலகிற்கு உணர்த்த முற்படுகிறார்.
நமக்கு அது விளங்கவில்லை. ஆனால், பதிகம் படைத்தவருக்கு விளங்குமல்லவா ?! என்று எண்ணி மாணிக்கவாசகரைத் தேடி  அனைவரும் புறப்படலானர்கள்…

Image result for மாணிக்கவாசகர்


காலை நேரத்தில் அவரின் குடிலில் சிவ கைங்கரியம் முடித்து .. சிவனே மயமாய் சிவ சிந்தனையில் அமர்ந்திருந்த மாணிக்கவாசகருக்கு இன்று என் வாழ்வின் முக்கியமான நாள் என்பதை #உள்ளுணர்வு #உணர்த்தியது … எல்லாம் ஈசனின் வழி நடப்பதே எம் கையில் எதுவும் இல்லை என்று சிந்தனையில் சிவத்தை நிறுத்தி சிவநாமத்தை இடைவிடாது கூறி தியானித்தில் அமர்ந்திருந்தவரிடம் மூவாயிரவர் தலைவர் அருகில் வந்து “ஐயனே” என்ற பவ்யமாய் அழைத்தார் தலைவர்… “சிவ சிவ” என்று கூறியவாரே கண் திறந்து தலைவரை பார்த்தார்.. பதிலுக்கு  வணக்கத்தைக் கூறி சொல்லுங்கள் ஐயா இந்த அடியவனைத் தேடி அனைரும் வந்திருக்கிறீர்கள் வந்ததன் காரணம் என பணிவாய்க் கேட்டார் மாணிக்கவாசகர். 


“தங்களின் சிவசிந்தனையின் இடைபுகுந்ததற்கு மன்னிக்கவும் ஐயனே! என்றவரின் கைப்பிடித்து சொல்லுங்கள் இந்த அடியவன் சிவனுக்கு தொண்டு செய்ய பிறந்தவன்.. எம்பொருட்டு எதாவது செய்ய வேண்டுமா?! சொல்லுங்கள்” என்றார் பணிவாய். 
“ஆம் ஐயனே!  இன்று கோவில் திறக்க எப்பொழுதும்போல் சென்ற அந்தணர் கருவறையில் வாயிலில் இந்த சுவடி இருந்ததை பார்த்தும் அதில் எழுதியிருந்த எழுத்தைப் பார்த்தும் திடுக்கிட்டவராய் என்னிடம் வந்து கொடுத்தார். நானும் படித்தேன். ஆனால் முழுவதும் அதன் அர்த்தம் விளங்கவில்லை.  இந்தச் சுவடியின் கடைசியில் திருவாதவூரார் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது என்றிருந்தது. அதனால், தங்களிடமே அதுபற்றி,  விளக்கம் பெற வந்தோம் ஐயனே” என்றார் மூவயிரமவரின் தலைவர்..
ஐயா அந்த ஓலைச்சுவடியைத் தாருங்கள் எனக்கேட்டார் ஆவலாய் மாணிக்கவாசகர்.
ஓலைச்சுவடியை கண்ணில் கண்டதுமே ஆனந்த பரவசத்தால் நீர்ததும்ப ஆரம்பித்தது   பயபக்தியுடன் கையில் வாங்கி, இறையே! எம் சிவனே! எனக்கூறியவாறே பிறந்த குழந்தையை பெற்றவன் தாங்குவதுபோல் கையில் தாங்கினார்.  அவரின் ஆனந்தத்திற்கு அளவில்லை.  பேரின்பம் பெருங்கடலாய் பெருக்கெடுத்தது. சிவன் அவனை சிந்தையிலே நிலைத்தவருக்கு சற்று நேரம் உற்றுப்பார்த்து நின்றார். இறையின் கையால் எழுதப்பட்ட  அழகிய சிற்றம்பலமுடையான் எழுதிய வார்த்தையை தொட்டு தடவினார் .

மனிதன் சொல்ல தெய்வம் எழுதிய திருவாசகம்


“அய்யனே!! அய்யனே!! உன்னை எவ்வாறு போற்றுவேன்?! இந்த அடியவனின் வாய்மொழியை உம் கையால் எழுதியதிற்கு என்ன தவம் எப்பிறவியில் செய்தேனோ!! இப்பிறவியில் இப்பேறு பெறுவதற்கு என்று நின்றவரின் முகத்தை அதிசயமாய் பார்த்து மற்றவர்கள் நின்றார்கள். இறுதி ஓலையைப் பார்த்து பூரித்து நின்ற மாணிக்கவாசகருக்கு ஈசனே உள்ளார்ந்து சொன்னார் “திருவாதவூராரே, நீர் எம் பாதம் புகும் காலம் வந்துவிட்டது . நான் உமக்களித்த வாக்கை நிறைவேற்றும் காலமும் கனிந்து வந்துவிட்டது . நீ ஆலயத்தினுள் சிற்றம்பலம் வருவாய் அங்கு எம் பாதம் புகுவாய் மாணிக்கவாசா” என்று சிவன் சிந்தையில் உரைக்க, மேலும் ஆனந்தம் பெருக்கெடுத்து உம் வாக்கை சிரமேற்கிறேன் ஈசனே என இறைஞ்சி, நினைவு திரும்பியவராய் வந்தவர்களைப் பார்த்து, “ஐயா இதில் என்ன சந்தேகம்?” என அன்புடன் கேட்டார் மாணிக்கவாசகர் தலைவரைப் பார்த்து, “பாட்டின் பொருள் வேண்டும் ஐயனே! படைத்தவர்  நீரே விளக்கம் தாருங்கள்” என்றார். “சரி பொருள் தானே?! என்னுடன் வாருங்கள்” என்றார் அனைவரையும் பார்த்து மாணிக்கவாசகர் . அரைவேட்டியும், திருநீறும், ருத்திராட்சம் அணிந்த கோலத்துடன் மாணிக்கவாசகர் முன்செல்ல மற்றவர்கள் அவரை பின்தொடர… நேராய் சிற்றம்பலத்திற்கு சென்று நின்றார். “பாட்டின் பொருள் தானே வேண்டும்?! அதோ அழகிய புன்முறுவலுடன் ஒற்றைக் காலால் உலகத்தை தாங்கி அடியவருக்கு அடியவனாய் எளியவருக்கு எளியோனாய் அபயம் அளித்து, மூன்று உலகத்தையும் உருவாக்கி அதை காத்தும் அழிக்கும் செயல்புரியம் இந்த பொன்னம்பலத்தான் ஆன இவர்தான் இந்த பாட்டிற்கெல்லாம் பொருள்” என்று கூறி மெய்ப்பொருளான பரம்பொருளின் பாதம் புகுந்து சிவ மோட்சம் அடைந்தார் மாணிக்கவாசகர் .

மனிதன் சொல்ல தெய்வம் எழுதிய திருவாசகம்

சிவனே சித்தமாய் சிவன் மூலமே தீட்சை பெற்று சிவவாக்கை சிரமேற்று சிவதலம் பல கண்டு தில்லைநாதனின் பொற்பாதம் புகுந்தார் மாணிக்கவாசகர் பாலில் கலந்த நீராய் தில்லை நடராஜரினுள் ஜோதியாய் கலந்தார். பார்த்தவர்கள் கண் பூரிப்பில் விரிந்தது.
ஈசனின் இச்செயலை காணும் பேறு பெற்றதை எண்ணி கூடியிருந்தவர்கள் அனைவரும் ஆனந்தமடைந்தார்.தங்கத் தட்டில் இப்பெரும் திரு ஓலைச்சுவடியான திருவாசகத்தை தில்லை நாதனின் பாதத்தில் வைத்து தினமும் ஆறு கால பூஜையிலும் இத் திருநூலை பாராயணம் செய்து வழிபாடு நடத்தினார்கள். தென்னகமே சைவத்தால் திளைத்தது. வாதவூரில் பிறந்து தென்னவன் பிரம்மராயன் பட்டம் பெற்று செல்வம் மற்றும் அமைச்சர் பதவியைத் துறந்து சிவனையே நினைந்துருகி
தில்லை அம்பலவாணனுடன் ஐக்கியமாகி திருவாசகம் எனும் தேனை தந்தருளிச் சென்றுள்ளார் மாணிக்கவாசகர் எனும் திருவாதவூரார். திருவாசகத்தை மனமுருகி படிப்போரும் ஈசனின் பொற்பாதம் அடைவது திண்ணமே!!

வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை 

நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே

தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,

என ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!” –  வள்ளலார் சுவாமிகள்

From around the web